எம்மைப்பற்றி

சிவத்தமிழ் தமிழ்ப்பள்ளி – Gravesend & Maidstone

சிவத்தமிழ் தமிழ்ப்பள்ளி என்பது தமிழ்மொழி, தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் செயல்படும் கல்வி மற்றும் பண்பாட்டு நிலையமாகும்.

எமது பள்ளியில் மாணவர்கள் தமிழை பேசுதல், வாசித்தல், எழுதுதல் மற்றும் புரிந்துகொள்ளுதல் ஆகிய திறன்களில் முன்னேறுவதற்கான முறையான கற்பித்தல் வழங்கப்படுகிறது. இதனுடன், தமிழர் மரபு, விழாக்கள், ஒழுக்கநெறிகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு போன்ற பண்பாட்டு மதிப்புகளும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.

கல்வியுடன் இணைந்து கலைத்திறன்களை வளர்க்கும் வகையில் பொங்கல் விழா, ஒளி விழா, வாணி விழா,விளையாட்டு விழா,ஆண்டுவிழா ,நினைவேந்தல் நிகழ்வுகள் போன்ற பல நிகழ்ச்சிகள் வருடம் முழுவதும் நடத்தப்படுகின்றன.

மேலும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு Cambridge O-Level தமிழ் மற்றும் Cambridge A-Level தமிழ் தேர்வுகளுக்கான ஆயத்தப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

எமது நோக்கம்: “வளர்தமிழ் – இயல், இசை, நாடகம்” என்ற அடிப்படையில் மொழியையும், கலையையும், பண்பாட்டையும் இணைத்து வளர்ப்பதாகும்.